29th January 2026
சிரேஷ்ட அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் அதிகாரவாணையற்ற அதிகாரிகளுக்கான படையலகு உதவி ஆயுத பாடநெறி எண் 103 (2025/II) 2026 ஜனவரி 27, அன்று மின்னேரியா காலாட்படை பயிற்சி நிலையத்தில் சான்றிதழ் வழங்கும் விழாவுடன் நிறைவடைந்தது.
இந்த நிகழ்வில் காலாட்படை பயிற்சி நிலைய தளபதி பிரிகேடியர் எம்எல்டிஎஸ் மொல்லிகொட யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பாடநெறியில் பங்குபற்றியவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
மூன்றரை மாத கால இந்தப் பாடநெறி 45 மாணவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றதுடன் இது படையலகின் படையலகு உதவி ஆயுத தொடர்பான தொழின்முறை அறிவு மற்றும் நடைமுறை திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
பாடநெறியின் நிறைவில், 4 வது இயந்திரவியற் காலாட் படையணியின் கோப்ரல் ஜி.கே.ஈ. குருசிங்க சிறந்த மாணவராக தெரிவு செய்யப்பட்டதுடன் ஒட்டுமொத்த செயல்திறனின் அடிப்படையில் முதலிடத்தைப் பெற்றார்.