27th January 2026
இலங்கை முழுவதும் பரவலான வெள்ளம், நிலச்சரிவுகள் மற்றும் உட்கட்டமைப்பு சேதங்களை ஏற்படுத்திய தித்வா சூறாவளியின் கடுமையான தாக்கத்தைத் தொடர்ந்து, இராணுவத் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் மற்றும் தலைமை களப் பொறியியலாளரின் மேற்பார்வையின் கீழ், இந்திய இராணுவத்தின் 19 வது பொறியியலாளர் படையணியுடன் இணைந்து, 6 வது கள பொறியியலாளர் படையணி அத்தியாவசிய வீதி சீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டன.
இராணுவ குழுக்களின் ஒத்துழைப்புடன் 2025 டிசம்பர் 31 முதல் 2026 ஜனவரி 05 வரை பெலிஹூல்ஓய பாலத்தின் கட்டுமான பணிகளும் 2026 ஜனவரி 9 முதல் 21 வரை கொஹொம்பகன பாலத்தின் கட்டுமான பணிகளும் மேற்கொள்ளப்பட்டதுடன் இலங்கை மற்றும் இந்திய படையினரின் ஒருங்கிணைந்த முயற்சிகளால் இரண்டு திட்டங்களும் நிறைவடைந்தது பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டதுடன் இதன் மூலம் அனர்த்த முகாமைத்துவ மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு மேம்படுத்தப்பட்டது.