27th January 2026
பொறியியல் சேவைகள் படையணியின் 16 வது படைத்தளபதியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் கே.ஏ.என். ரசிக்க குமார என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 2026 ஜனவரி 17 அன்று படையணி தலைமையகத்தில் தனது பணிகளிலிருந்து விடைபெற்றார்.
விடைபெறும் தளபதிக்கு சம்பிரதாய பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன் தொடர்ந்து சம்பிரதாய அணிவகுப்பும் வழங்கப்பட்டது. அதன்பிறகு, பொறியியல் சேவைகள் படையணி அதிகாரிகளுடன் குழுபடம் எடுக்க அழைக்கப்பட்டார்.
அனைத்துப் நிலையினருக்கும் உரையாற்றிய மேஜர் ஜெனரல் கே.ஏ.என். ரசிக்க குமார என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் தனது பதவிக் காலத்தில் படையணி அடைந்த சாதனைகளைப் பற்றி நினைவு கூர்ந்துடன் மேலும், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் அர்ப்பணிப்பு மற்றும் அயராத சேவைக்கு தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்தார். இந்த நிகழ்வின் முக்கியத்துவத்தை அதிகரிக்கும் வகையில், அதிகாரவனையற்ற அதிகாரிகள் மற்றும் சார்ஜன் உணவகத்திற்கு சென்று படையினருடன் உரையாடியதுடன் விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் தனது எண்ணங்களையும் பதிவிட்டார்.
அன்றைய சம்பிரதாயங்கள், அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் அதிகாரிகள் விடுதியில் வழங்கப்பட்ட பிரியாவிடை இரவு விருந்துடன் நிறைவடைந்தன. இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.