புல்மோட்டையில் ஏழைக் குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் மற்றும் பாடசாலை பைகள் வழங்கல்

தேர்ந்தெடுக்கப்பட்ட 200 ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை பிள்ளைகளுக்கு 200 உலர் உணவுப் பொதிகள் மற்றும் 100 பாடசாலை பைகளை விநியோகிக்கும் திட்டம் 22 வது காலாட் படைப்பிரிவால் 2026 ஜனவரி 19 அன்று புல்மோட்டை அர்பாத் முஸ்லிம் பாடசாலையில் நடத்தப்பட்டது.

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டது. மேஜர் ஜெனரல் ஏ.பி.ஐ. பெர்னாண்டோ ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ (ஓய்வு) அவர்களின் ஒருங்கிணைப்பு மற்றும் அமெரிக்காவில் வசிக்கும் டாக்டர் யமானி குணவர்தன மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் நிதி பங்களிப்புகள் மூலம் இந்த திட்டம் சாத்தியமானது.