19th January 2026
நேபாள இராணுவ கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியைச் சேர்ந்த தூதுக்குழு, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களை 2026 ஜனவரி 19 அன்று இராணுவத் தலைமையகத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தது.
பிரிகேடியர் ஜெனரல் பூர்ணா பகதூர் காத்ரி தலைமையிலான இந்தக் குழுவில், பயிற்றுவிப்பாளர் லெப்டினன் கேணல் நிர்மல் குமார் ஷெஸ்ட்ரா மற்றும் இரு மாணவ அதிகாரிகள் இணைந்து பங்கேற்றனர்.
வருகை தந்த குழுவில், நேபாள இராணுவ கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியை பிரதிநிதித்துவப்படுத்தும் தூதுக்குழுத் தலைவர், மூன்று பயிற்றுவிப்பாளர் அதிகாரிகள், பத்து மாணவ அதிகாரிகள் மற்றும் ஒரு சிப்பாய் ஆகியோர் அடங்கிய மொத்தம் 15 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர்.