16th January 2026
இலங்கை இராணுவத்தில் இருந்து 35 ஆண்டுகளுக்கும் மேலான சிறப்புமிக்க சேவையை நிறைவு செய்து ஓய்வு பெறுவதற்கு முன்னர், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதியாக பதவி வகித்த மேஜர் ஜெனரல் கே.ஏ.என். ரசிக்க குமார அவர்களுக்கு, 2026 ஜனவரி 14 ஆம் திகதி பலாலி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில், யாழ். படையினர் சம்பிரதாயங்களுக்கமைய பிரியாவிடை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.
இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய, ஓய்வுபெறும் தளபதிக்கு நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 5 வது பொறியியல் சேவைகள் படையணி படையினரால் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
அன்றைய தினத்தை நினைவுகூறும் வகையில், ஓய்வு பெறும் தளபதி அதிகாரிகளுடன் குழுப்படம் எடுத்துக் கொண்டார். அதன் பின்னர், அவர் படையினருக்கு உரையாற்றினார். யாழ் தீபகற்பத்தில் சிவில்-இராணுவ ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும் அதே வேளையில் அமைதியான சூழலைப் பேணுவதில் அர்ப்பணிப்பு, தொழில்முறை மற்றும் அர்ப்பணிப்புடன் சேவை செய்ததற்காக அந்தந்த பிரிவுகளில் பணியாற்றும் அனைத்து படையினருக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
அன்றைய பிரியாவிடை நிகழ்வின் இறுதியில், யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கட்டளையின் கீழ் இயங்கும் காலாட் படைப்பிரிவுகள் மற்றும் வழங்கல் கட்டளை ஆகியவற்றால் விடைபெறும் தளபதிக்கு நினைவுப் பரிசில்கள் வழங்கப்பட்டன. அனைத்து நிலையினருடனும் தொடர்பு கொள்ளும் வகையில் வகையில், அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துடன் சம்பிரதாய நகழ்வுகள் நிறைவடைந்தன. பின்னர், விடைபெறும் தளபதி விருந்தினர் பதிவேட்டுப் புத்தகத்தில் பதிவிட்டார்.
இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.