14th January 2026
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் அமந்தா ஜோன்ஸ்டன் அவர்கள் 2026 ஜனவரி 13, அன்று யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு மரியாதை நிமித்தமாக விஜயம் மேற்கொண்டார்.
51 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எம்.ஆர். ராசிக் ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் அவரை மரியாதையுடன் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து, இராணுவத்தால் மேற்கொள்ளப்படும் பணிகள், குறிப்பாக சமூக உறவுத் திட்டங்கள், பாதுகாப்பு மற்றும் ஏனைய பொதுவான விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்துவது குறித்து விளக்கமளித்தார்.
சந்திப்பின் முடிவில், நிகழ்வின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில் நினைவுப் பரிசில்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. அத்துடன் பாதுகாப்பு ஆலோசகர் அதிதிகள் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டுக்களை பதிவிட்டர்.
இந்த நிகழ்வில் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொதுப்பணி பிரிகேடியர் எம்.எச்.ஆர். பெர்னாண்டோ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களும் கலந்துகொண்டார்.