இலங்கை பொறியியல் படையணியினரால் நிதியுதவித் திட்டம்

இலங்கை பொறியியல் படையணி, தித்வாவினால் பாதிக்கப்பட்ட அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் சிவில் ஊழியர்களுக்கு ஆதரவாக 2026 ஜனவரி 11 ஆம் திகதி இலங்கை பொறியியல் படையணி தலைமையகத்தில் நிதியுதவி வழங்கும் திட்டத்தை நடாத்தியது.

இந்நிகழ்வில் இராணுவ பதவி நிலை பிரதானியும், இலங்கை பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே.தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். இந்த நிகழ்வின் போது, பாதிக்கப்பட்ட 25 பணியாளர்களுக்கு மொத்தம் ரூ. 1.4 மில்லியன் நிதி வழங்கப்பட்டது.

பங்கேற்பாளர்களுக்கு உரையாற்றிய படையணியின் படைத் தளபதி, இலங்கை பொறியியல் படையணி படையினரால் நடாத்தப்பட்ட பல பரிமாண அனர்த்த நிவாரண பணிகளை பாராட்டினார். குறிப்பாக அத்தியாவசிய பொது சேவைகளை மீட்டெடுப்பது, முக்கிய உட்கட்டமைப்பைப் பாதுகாத்தல் மற்றும் நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீடித்த ஆதரவு வழங்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தினார்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.