22 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு

மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.எம்.கே.ஜீ.கே. வீரசேகர டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஏயூஎஸ்டபிள்யூசீ பீஎஸ்சீ அவர்கள் 22 வது காலாட் படைப்பிரிவின் 34 வது தளபதியாக திருகோணமலை படைப்பிரவு தலைமையகத்தில் 2026 ஜனவரி 05 ஆம் திகதி கடமை பொறுப்பேற்றார்.

வருகை தந்த தளபதிக்கு, 22 வது காலாட் படைப்பிரிவின் படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. சம்பிரதாய நிகழ்வுகளைத் தொடர்ந்து, படைப்பிரிவின் தளபதி தனது தொலைநோக்கு, தலைமைத்துவ தத்துவம் மற்றும் படைப்பிரிவின் எதிர்கால வளர்ச்சி மற்றும் செயற்பாட்டுத் தயார்நிலைக்கான எதிர்பார்ப்புகளை கோடிட்டுக் காட்டி படையினருக்கு உரையாற்றினார்.

அன்றைய தின நிகழ்வுகள், அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரத்துடன் நிறைவடைந்தது. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.