9th January 2026
பிரிகேடியர் எம்.எம்.துசித்த பண்டார யூஎஸ்பீ ஏயூஎஸ்டபிள்யூசீ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் 40 வது தளபதியாக 2026 ஜனவரி 06 ஆம் திகதி கடமை பொறுப்பேற்றார்.
புதிய தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், போர் வீரர்கள் நினைவுத் தூபியில் வீரமரணமடைந்த போர் வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
சீன-லங்கா நட்புறவு மண்டபத்தில் அனைத்து நிலையினருக்கும் உரையாற்றிய தளபதி, எதிர்காலத்திற்கு இராணுவ தலைவர்களை உருவாக்குவதில் கூட்டு பொறுப்பு, அர்ப்பணிக்கப்பட்ட சேவை, ஒழுக்கம் மற்றும் தொழில்முறை சிறப்பை வலியுறுத்தினார். அதே நேரத்தில், நேர்மறையான மனநிலை மற்றும் தனிப்பட்ட திருப்தியின் அவசியத்தையும் அவர் எடுத்துக்காட்டினார்.
இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.