இலங்கை இராணுவத்தின் ஆராய்ச்சி மற்றும் கோட்பாடு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் கடமை பொறுப்பேற்பு

மேஜர் ஜெனரல் ஜீ.டி.ஜே.சீ. பிரேமதிலக்க யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் இலங்கை இராணுவத்தின் ஆராய்ச்சி மற்றும் கோட்பாடு பணிப்பகத்தின் 07 வது பணிப்பாளர் நாயகமாக 2026 ஜனவரி 07 ஆம் திகதி பணிப்பகத்தில் கடமை பொறுப்பேற்றார்.

சம்பிரதாய நிகழ்வுகளைத் தொடர்ந்து, நியமிக்கப்பட்ட புதிய பணிப்பாளர் நாயகம் அவர்கள், பணிப்பகத்தின் அனைத்து நிலையினருக்கும் உரையாற்றினார். தனது உரையில், இலங்கை இராணுவத்தின் எதிர்கால செயற்பாட்டு செயற்திறனை மேம்படுத்துவதில் ஆராய்ச்சி மற்றும் கோட்பாடு கொள்கை ஆகியவற்றின் முக்கிய பங்கை அவர் எடுத்துரைத்தார்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.