8th January 2026
54 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.எம்.சி. அபேகோன் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ அவர்கள் இலங்கை சிங்க படையணியின் 20 வது படைத் தளபதியாக 2025 டிசம்பர் 29 ஆம் திகதி அம்பேபுஸ்ஸ படையணி தலைமையகத்தில் சம்பிரதாயமாக கடமைப் பொறுப்பேற்றார்.
வருகை தந்த சிரேஷ்ட அதிகாரிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர், போர் வீரர்கள் நினைவுத் தூபியில் மலர்வளயம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து படையணி வளாகத்தில் ஒரு மரக்கன்று நடப்பட்டது. பின்னர் படையினருக்கு உரையாற்றிய படையணியின் தளபதி, படையணியின் எதிர்காலத்திற்கான தனது எண்ணங்கள் மற்றும் வழிகாட்டுதலைப் பகிர்ந்து கொண்டார்.
அதிகாரிகள் விடுதியில் அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரம், குழுப்படம் மற்றும் மதிய உணவு விருந்துடன் நிகழ்வுகள் நிறைவடைந்தன. இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.