8th January 2026
நாட்டைப் பாதித்த சீரற்ற வானிலைக்கு பதிலளிக்கும் விதமாக, நீர்ப்பாசனத் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கமைய, 242 வது காலாட் பிரிகேடின் 14 வது இலங்கை சிங்க படையணியின் படையினர், 2026 ஜனவரி 07 ஆம் திகதி தூவே குளத்தின் பக்கவாட்டு கரையை மீட்டெடுக்கும் பணிகளை மேற்கொண்டனர்.
கரைக்கு மேலும் சேதம் ஏற்படுவதைத் தடுக்கவும், சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதைத் தடுக்கவும் படையினர் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொண்டனர்.