7th January 2026
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இந்திய இராணுவ பிரதானி ஜெனரல் உபேந்திர திவேதி அவர்கள் தனது துணைவியர் திருமதி சுனிதா திவேதி அவர்களுடன் 2026 ஜனவரி 06 ஆம் திகதி இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.
வருகை தந்த ஜெனரல் உபேந்திர திவேதி அவர்களை இலங்கை இராணுவ பிரதானி மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே.தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் இலங்கைக்கான இந்திய பிரதி உயர் ஸ்தானிகர் கலாநிதி சத்தியஞ்சல் பாண்டே அவர்களுடன் இணைந்து மரியாதையுடன் வரவேற்றனர்.
இந்த விஜயத்தின் போது, இந்திய இராணுவ பிரதானி, சிரேஷ்ட இராணுவ மற்றும் அரச அதிகாரிகளைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இரு படைகளுக்கும் இடையிலான தொழில்முறை இராணுவ தொடர்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன், பயிற்சி ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு விடயங்களில் இந்த கலந்துரையாடல் கவனம் செலுத்தும்.
இந்நிகழ்வில் இராணுவத் தலைமையகத்தின் பணிப்பாளர்கள், இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலய அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.