6th January 2026
மேஜர் ஜெனரல் பீ.எஸ். சுபத் சஞ்சீவ ஆர்எஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ அவர்கள் முதலாம் படையின் 9 வது தளபதியாக 2026 ஜனவரி 05 ஆம் திகதி தலைமையகத்தில் நடைபெற்ற சம்பிரதாய நிகழ்வின்போது கடமைகளை பொறுப்பேற்றார்.
வருகை தந்த அவருக்கு, முதலாவது விஜயபாகு காலாட் படையணி படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையும் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்நிகழ்வை நினைவுகூரும் வகையில் அவர் ஒரு சந்தன மரக்கன்றை நாட்டினார். பின்னர், எதிர்காலத்திற்கான தனது தொலைநோக்கை எடுத்துரைத்து படையினரிடம் உரையாற்றினார். இறுதியாக, கோப்ரல் உணவகத்தில் இடம்பெற்ற தேநீர் விருந்துபசாரத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது.