6th January 2026
விசேட படையணி தலைமையகம் தனது 29 வது ஆண்டு நிறைவை 2026 ஜனவரி 03 அன்று, படையணி தலைமையகத்தில் நடைபெற்ற தொடர்ச்சியான நிகழ்வுகளுடன் கொண்டாடியது.
இந்த நிகழ்வில், விஷேட படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டபிள்யூ.பி.எம்.கே.ஜீ.கே. வீரசேகர டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஏயூஎஸ்டபிள்யூசீ பீஎஸ்சீ அவர்களுடன், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.
ஆண்டு நிறைவை முன்னிட்டு, 2025 ஆம் ஆண்டிற்கான படையணிகளுக்கிடையிலான துப்பாக்கிச் சூட்டு போட்டியில் சம்பியன்ஷிப் பட்டம் பெற்ற விசேட படையணியின் துப்பாக்கிச் சூட்டு குழுவினரை கௌரவிக்கும் வகையில் பாராட்டு விழா நடாத்தப்பட்டது.