இலங்கை இராணுவ படையணிகளுக்கிடையிலான முப்போட்டி சாம்பியன்ஷிப் 2025

இலங்கை இராணுவ படையணிகளுக்கிடையிலான முப்போட்டி சாம்பியன்ஷிப் 2025 டிசம்பர் 20 அன்று எம்பிலிப்பிட்டிய சந்திரிகா குள வளாகத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் 12 படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தி மொத்தம் 55 ஆண் மற்றும் 2 பெண் விளையாட்டு போட்டியாளர்கள் மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த மற்றும் தொழில்முறை ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட போட்டியில் போட்டியிட்டனர்.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக 24 வது காலாட் படைப்பிரிவின் தளபதியும், இலங்கை இராணுவ முப்போட்டி குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் கே.டபிள்யூ. ஜயவீர யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் கலந்து கொண்டார்.

முப்போட்டியானது போட்டியாளர்களின் ஒட்டுமொத்த தடகளத் திறனை வெளிக்காட்ட வடிவமைக்கப்பட்ட மூன்று கடினமான பிரிவுகளைக் கொண்டிருந்தது, அதாவது நீச்சல் - 750 மீட்டர், சைக்கிள் ஓட்டுதல் - 20 கிலோமீட்டர் மற்றும் ஓட்டம் - 5 கிலோமீட்டர் ஆகும்.

இந்த சாம்பியன்ஷிப் போட்டியின் முடிவுகள் பின்வருமாறு:

திறந்த ஆண்கள் பிரிவு

* முதலாம் இடம் – லான்ஸ் கோப்ரல் எம்.பீ.எஸ்.ஆர். பிரியதர்ஷன (இலங்கை இராணுவ மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி)

* 2ம் இடம் – சாதாரண சிப்பாய் ஆர்.எம்.என்.எச். சுசிரிபால (இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படையணி)

* 3ம் இடம் - கோப்ரல் எச்.பி.ஏ. சந்திரசிறி (இலங்கை இராணுவ போர்கருவி படையணி)

புதியவர் ஆண்கள் பிரிவு

* முதலாம் இடம் – லான்ஸ் கோப்ரல் எம்.டி.எஸ். புஷ்பகுமார (இலங்கை இராணுவ மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி)

* 2ம் இடம் - சாஜன்ட் எச்.ஏ.ஆர். சாமர குமார ( இலங்கை இராணுவ இலேசாயுத காலாட் படையணி)

* 3ம் இடம் – சிப்பாய் டபிள்யூ.ஏ.டி. ஹெட்டியாராச்சி (இலங்கை இராணுவ சேவைப் படையணி)

திறந்த பெண்கள் பிரிவு

*முதலாம் இடம் – சிப்பாய் என்.எச்.ஏ.டி சில்வா (இலங்கை இராணுவ சேவைப் படையணி)

* 2ம் இடம் – லான்ஸ் கோப்ரல் எச்.கே.ஐ.டி. உதயகுமாரி (இலங்கை இராணுவ மகளிர் படையணி)

அணிப் போட்டிகளில், இலங்கை இராணுவ மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி ஆண்கள் அணி சம்பியன்ஷிப்பை பெற்றதுடன், இலங்கை பீரங்கிப் படையணி ஆண்கள் அணி இரண்டாம் இடத்தைப் பெற்றுகொண்டது.