துருத்து பௌர்ணமி தினத்தன்று மத அனுஷ்டானங்களில் இராணுவத் தளபதி பங்குபற்றல்

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இலங்கை இராணுவ பௌத்த சங்கத்தினால் பனாகொட ஸ்ரீ போதிராஜாராமய விகாரையில் 2026 ஜனவரி 03 அன்று துருத்து பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட சமய நிகழ்வில் கலந்து கொண்டார்.

ஆயுதப் படைகளுக்கு ஆசிர்வாதம் கோருவதற்கும், தேசத்திற்காக உயர்ந்த தியாகத்தைச் செய்த வீரமரணம் அடைந்த போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த நிகழ்வின் போது இராணுவத் தளபதி தானத்தில் பங்கேற்றதுடன் மகா சங்கத்தினரால் நடத்தப்பட்ட தர்ம பிரசங்கத்திலும் கலந்து கொண்டார்.

இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் கே.வீ.என்.பீ பிரேமரத்ன ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ, மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் யூ.கே.டி.டி.பீ உடுகம ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மத அனுஷ்டானங்களில் கலந்து கொண்டனர்.