3rd January 2026
பல்லேகலையில் உள்ள 11 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் மத ஆசீர்வாதங்கள் மற்றும் இராணுவ சம்பிரதாயங்களுக்கு மத்தியில் 11 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் எம்.ஜே.ஆர்.எஸ். மெதகொட ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சி ஐஜீ அவர்கள் 2025 டிசம்பர் 29 அன்று கடமைகளைப் பொறுப்பேற்றார்.
வருகை தந்த தளபதிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன் 5 வது (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணி படையினரால் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதன்பிறகு, அவர் அனைத்து அதிகாரிகளுடனும் குழு படம் எடுத்துக்கொண்டதுடன், அனைத்து நிலையினருடனான தேநீர் விருந்திலும் பங்கேற்றார்.
இந் நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் பங்குபற்றினர்.