1st January 2026
ஸ்ரீ ஜயவர்தனபுர இராணுவத் தலைமையகத்தில் 2026 ஆம் ஆண்டின் முதல் பணி நாள் சம்பிரதாயங்களுக்கு மத்தியில் கொண்டாடப்பட்டது.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் பிரதம அதிதியாக தலைமையக வளாகத்திற்கு வருகை தந்ததை தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகின. இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ மற்றும் இராணுவ தளபதி தேசியக் கொடி மற்றும் இராணுவ கொடி ஆகியவற்றை ஏற்றி வைத்தனர்.
இந்நிகழ்வில் தேசிய கீதம் மற்றும் இராணுவ கீதம் இசைத்தல், இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு உயிரிழந்த போர்வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. நிறைவேற்று பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கேடிபீடி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் அரச உறுதி உரையினை வாசித்தார்.
தமது உரையில், இராணுவத் தளபதி 2026 ஆம் புத்தாண்டு வாழ்த்துகளை அனைத்து நிலையினருக்கும் தெரிவித்ததுடன், ‘தேசத்தின் பெருமை, மக்களின் வலிமை’ என்ற இராணுவத்தின் பங்கினை மீண்டும் உறுதிப்படுத்தினார். மேலும், உயிர்நீத்த போர் வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியதுடன் காயமடைந்த வீரர்களையும் நினைவுகூர்ந்தார்.முன்னாள் தளபதிகள் மற்றும் அனைத்து நிலைகளிலுள்ள படையினரின் பங்களிப்புகளையும் பாராட்டினார். உயர்ந்த போர்த் தயார்நிலை மற்றும் தொழில்முறைத் திறனூடாக தேசிய ஒற்றுமை, இறையாண்மை மற்றும் பாதுகாப்பை பாதுகாக்கும் இராணுவத்தின் நிரந்தரப் பொறுப்புகளையும் அவர் வலியுறுத்தினார்.”
சிப்பாய்களை மையமாகக் கொண்ட மற்றும் சிப்பாய் நட்பு படையை நோக்கிய முன்னேற்றத்தை எடுத்துரைத்த அவர், நெறிமுறை, உடல் மற்றும் கருத்தியல் களங்களில் முன்னேற்றங்கள், அரசாங்கத்தின் "தூய இலங்கை" திட்டம் மற்றும் தேசிய அனர்த்தங்களின் போது முதலில் பதிலளிப்பவர்களாக இராணுவத்தின் முன்மாதிரியான பங்கை கோடிட்டுக் காட்டினார். வரும் ஆண்டில் படை வலுவான, பாதுகாப்பான மற்றும் மீள்தன்மை கொண்ட இலங்கையை நோக்கி நகரும்போது, நெறிமுறை நடத்தையை நிலைநிறுத்தவும், தேசிய மீட்பு மற்றும் வளர்ச்சிக்கு பங்களிக்கவும், தொழில்முறை, நம்பகத்தன்மை மற்றும் மரியாதை மூலம் வெற்றியை அடைவதற்கான இராணுவத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு உறுதியுடன் இருக்கவும் அனைத்து அணிகளுக்கும் வலியுறுத்தினார்.
பின்னர், இராணுவத் தளபதி மதகுருமார்களிடமிருந்து ஆசிகளைப் பெற்றார்.
அனைத்து நிலைகளின் தேநீர் விருந்துபசாரத்துடன் சம்பிரதாயங்கள் முடிவடைந்தன, இந் நிகழ்வு தளபதி படையினர்களுடன் தொடர்பு கொள்ள ஒரு வாய்ப்பை வழங்கியது. சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.