30th December 2025
மட்டக்களப்பு சிவில் சமூகக் குழு 2025 டிசம்பர் 28 ஆம் திகதி புனானி சர்வதேச அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் வழங்கும் விழாவை நடாத்தியது. 12 மாத டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த 200 மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கியது.
கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் ஜே.எஸ்.பி.டபிள்யூ. பல்லேகும்புர ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ மற்றும் 23 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜே.பீ.பீ. குலதிலக என்டியூ ஆகியோர் இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
பல்வேறு பாடப் பிரிவுகளில் டிப்ளோமா பாடநெறியை முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்கள் முறையாக வழங்கப்பட்டன. இது அவர்களின் கல்விப் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.