29th December 2025
56வது காலாட் படைப்பிரிவின் ஏற்பாட்டில் 2025 டிசம்பர் 24, அன்று நெடுங்குளம் ஆரம்ப பாடசாலையின் 56 மாணவர்களுக்கு எழுதுபொருட்கள் விநியோகத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதில் நெடுங்குளம் ஆரம்ப பாடசாலையின் 45 மாணவர்களும், கொக்வெலிய ஆரம்ப பாடசாலையின் 11 மாணவர்களும் பயன்பெற்றனர்.
திரு. நலித்த திசாநாயக்க, அவரது குடும்ப உறுப்பினர்கள், அவரது கல்லூரி நண்பர்கள் மற்றும் பிரி பைக்கர் அலையன்ஸ் வேர்ல்ட் - இலங்கை உறுப்பினர்களின் நிதி பங்களிப்புகள் மூலம் இந்த திட்டம் சாத்தியமானது.
56வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஏ.யு.ஏ. சோலங்கராச்சி ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் நன்கொடையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.