26th December 2025
பொறியியல் சேவைகள் படையணியின் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு 2025 டிசம்பர் 24 ஆம் திகதி படையணி தலைமையகத்தில், அதன் படையினர் இரத்த தான முகாமை நடாத்தினர்.
இந்த திட்டத்தின் போது, பொறியியல் சேவைகள் படையணி மற்றும் மேற்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 130க்கும் மேற்பட்ட பணிநிலையாளர்கள் இரத்த தானம் செய்தனர்.
பொறியியல் சேவைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் வை.கே.எஸ்.ரங்கிக பீஎஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.