26th December 2025
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் கருத்திற்கமைய, அபிமன்சல–1 நலவிடுதியின் தளபதி பிரிகேடியர் யூ.ஆர்.ஐ.பி. ரணதுங்க ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் பேராசிரியர் நோர்பர்ட் ஆண்ட்ராடி அவர்களால் 2025 டிசம்பர் 23 ஆம் திகதி அனுராதபுரம் அபிமன்சல–1 நல விடுதியில் உள்ளவர்களுக்காக பிரார்த்தனை மற்றும் ஆசீர்வாத நிகழ்வுகள் நடாத்தப்பட்டன.
இந்நிகழ்வில் 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டி.என்.கே. பெரேரா அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். பின்னர், நல விடுதியில் உள்ளவர்களுக்கு பரிசுப் பொதிகள் வழங்கப்பட்டதுடன், நத்தார் கரோல் பாடல்கள் பாடப்பட்டன.
வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் வழங்கல் தளபதி மேஜர் ஜெனரல் கே.ஜி.யு.டி. ஜயசிங்க, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.