இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் அதிகாரவாணையற்ற அதிகாரியின் சிறந்த செயற்திறனுக்கு இராணுவ தளபதி கௌரவிப்பு

இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் பணிநிலை சார்ஜன் கே.எம்.சீ.எஸ். குலசேகர யூஎஸ்பீ அவர்கள் அணிநடை பயிற்றுவிப்பாளர் பாடநெறி எண் 134 இல் முதலிடத்தைப் பெற்றார்.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 டிசம்பர் 24 ஆம் திகதி இலங்கை இராணுவ பொலிஸ் படையணி தலைமையகத்திற்கு விஜயம் செய்தபோது, இந்த கடின உழைப்பால் பெறப்பட்ட சாதனையை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு விருது வழங்கி கௌரவித்தார்.

இலங்கை இராணுவ செயலாளரும், இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் பி.ஜி.எஸ். பெர்னாண்டோ யூஎஸ்பீ எச்டிஎம்சீ பீஎஸ்சீ மற்றும் இலங்கை இராணுவ ஒழுக்க பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஏ.எம்.ஆர். அபேசிங்க ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.