இலங்கை இராணுவ விளையாட்டு உடற் பிடிப்பு பயிற்சி பாடநெறி எண். 10 நிறைவு

இலங்கை இராணுவ விளையாட்டு மருத்துவப் பிரிவு, விளையாட்டு உடற் பிடிப்பு பயிற்சி பாடநெறி. 10 (NVQ Level 04) இன் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இலங்கை இராணுவ சமிக்ஞைப் படையணி விரிவுரை மண்டபத்தில் 2025 டிசம்பர் 19 அன்று இடம்பெற்றது.

விளையாட்டு அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவ நிலையத்தின் வழிகாட்டுதலின் கீழ், மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி அதிகார சபையுடன் இணைந்து நடத்தப்பட்ட ஒரு வருட கால பாடநெறி விளையாட்டு உடற் பிடிப்பு பாடநெறி தொழில் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தியது.

விளையாட்டு அபிவிருத்தி மற்றும் முகாமைத்துவ நிலைய தளபதி கேணல் டபிள்யூ.பீ.கே. செனரத் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஐஜீ அவர்கள் இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் 47 பங்கேற்பாளர்கள் தங்கள் சான்றிதழ்களைப் பெற்றனர்.

இராணுவ பொலிஸ் படையணியை சேர்ந்த லான்ஸ் கோப்ரல் எச்.எல்.எஸ்.எம். பிரியதர்ஷன தனது செயல்திறனுக்காக சிறந்த மாணவருக்கான விருதைப் பெற்றார்.

இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் தொழிற்கல்வி ஆணையத்தின் அதிகாரிகள் பங்கேற்றனர்.