23rd December 2025
பனாகொடை இராணுவ உடற் பயிற்சி பாடசாலையில் உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர் பாடநெறியின் விடுகை அணிவகுப்பு 2025 டிசம்பர் 19 ஆம் திகதி சம்பிரதாய விழாவுடன் நிறைவடைந்தன.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக பயிற்சி பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் பி.ஏ.டி.ஆர்.ஏ.சீ. விஜயசேகர ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ யூஎஸ்ஏசீஜீஎஸ்சீ அவர்கள் கலந்து கொண்டார்.
மொத்தம் 199 பயிற்சியாளர்கள் தங்கள் பாடநெறிகளை வெற்றிகரமாக நிறைவு செய்தனர். இதில் சிரேஷ்ட உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர்கள் பாடநெறி எண். 20 இலிருந்து 19 அதிகாரிகள், மேம்பட்ட உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர்கள் பாடநெறி எண். 50 இலிருந்து 12 பயிற்றுவிப்பாளர்கள், உதவி உடற்பயிற்சி பயிற்றுவிப்பாளர்கள் பாடநெறி எண். 135 இலிருந்து 132 சிப்பாய்கள் மற்றும் தேசிய தொழிற்தகுதி நிலை 04 பாடநெறியிலிருந்து 36 பயிற்றுவிப்பாளர்கள் அடங்குவர்.
விழாவின் போது, அந்தந்த பாடநெறிகளில் சிறந்த செயற்திறனை வெளிப்படுத்திய சிறந்த சகலதுறை மாணவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. விருது பெற்றவர்கள் பின்வருமாறு:
1 வது இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் கெப்டன் எச்.எல்.டி. காவிந்த – சிரேஷ்ட உடற்பயற்சி பயிற்றுனர்கள் பாடநெறி எண். 20
1 வது கொமாண்டோ படையணியின் லான்ஸ் கோப்ரல் டி.ஏ.எஸ். மதுஷான் - மேம்பட்ட உடற்பயிற்சி பயிற்றுனர்கள் பாடநெறி எண். 50
4 வது இலங்கை இராணுவ பொலிஸ் படையணியின் லான்ஸ் கோப்ரல் எஸ்.டி. மாணிக் அதுல - உதவி உடற்பயிற்சி பயிற்றுனர்கள் பாடநெறி எண். 135 (பெண்)
3 வது கொமாண்டோ படையணியின் லான்ஸ் கோப்ரல் எச்.ஜே.டி.எஸ். வீரவர்தன - உதவி உடற்பயிற்சி பயிற்றுனர்கள் பாடநெறி எண். 135 (ஆண்)
இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.