23rd December 2025
2025 ஆம் ஆண்டுக்கான இராணுவப் படையணிகளுக்கு இடையிலான போர் துப்பாக்கி சூட்டு சாம்பியன்ஷிப் போட்டியின் சான்றிதழ் மற்றும் கிண்ணம் வழங்கும் நிகழ்வு 2025 டிசம்பர் 22 ஆம் திகதி இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் சீன-இலங்கை நட்புறவு கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
இராணுவ இலகுரக ஆயுத சங்கம் மற்றும் குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்போட்டி தியத்தலாவை 1000 மீட்டர் துப்பாக்கி சூட்டு மைதானத்தில் 2025 நவம்பர் 04 முதல் 15 வரை நடைபெற்றது. 405 துப்பாக்கி சூட்டு வீரர்கள் உட்பட 23 படையணிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 37 அணிகள் திறந்த, புதியவர்கள் மற்றும் சேவை படையணிகள் என போட்டியிட்டன.
இந்த நிகழ்வின் போது, இராணுவ இலகுரக ஆயுத சங்கத்தின் துப்பாக்கி சூட்டு வீரர்களால் சிறு ஆயுதங்கள் காட்சிப்படுத்தல் மற்றும் கண்காட்சி படப்பிடிப்பும் நடாத்தப்பட்டது.
சாம்பியன்ஷிப்பின் போது, 63 துப்பாக்கி சூட்டு வீரர்கள் முதல் முறையாக குறிபார்க்கும் சின்னத்தைப் பெற தகுதி பெற்றனர். அதே நேரத்தில் 121 துப்பாக்கி சூட்டு வீரர்கள் இராணுவத் தளபதியின் பதக்கத்தைப் பெற தகுதி பெற்றனர்.
நிகழ்வின் முடிவில், இலங்கை இராணுவ இலகுரக ஆயுத சங்கத்தின் தலைவரால் இராணுவத் தளபதிக்கு நினைவுப் பரிசில் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டி.கே.எஸ்.கே.தொலகே யூஎஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சீ, பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.
பின்வரும் படையணிகள் மற்றும் தனிநபர்கள் அந்தந்த பிரிவுகளில் சிறந்து விளங்கினர்:
திறந்த அணி சாம்பியன்ஷிப்
• சாம்பியன்: விஷேட படையணி
• இரண்டாம் இடம்: கொமாண்டோ படையணி
• மூன்றாம் இடம்: கெமுனு ஹேவா படையணி
புதியவர்கள் அணி சாம்பியன்ஷிப்
• சாம்பியன்: கொமாண்டோ படையணி
• இரண்டாம் இடம்: கெமுனு ஹேவா படையணி
• மூன்றாம் இடம்: விஷேட படையணி
சேவைப் படையணி சாம்பியன்ஷிப்
• சாம்பியன்கள்: இராணுவ பொலிஸ் படையணி
• இரண்டாம் இடம்: பொறியியல் சேவைகள் படையணி
• மூன்றாம் இடம்: இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி
தனிப்பட்ட விருதுகள்
• போட்டி தொடரின் சிறந்த சூட்டு வீரர் : லெப்டினன் எம்.ஏ.ஆர்.டி.என். விக்ரமநாயக்க – 3 வது விஷேட படையணி
• சிறந்த சூட்டு வீரர் - கொடி தரவரிசை பிரிவு (மேஜர் ஜெனரல்/பிரிகேடியர்) : பிரிகேடியர் எச்.ஏ.ஏ.என்.சீ. பிரபாத் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ
• சிறந்த சூட்டு வீரர் – சீரேஷ்ட அதிகாரி பிரிவு (கேணல்/லெப்டினன் கேணல்) : கேணல் எஸ். ராஜபக்ஷ
• சிறந்த சூட்டு வீரர் - புதியவர்கள் பிரிவு : கோப்ரல் டபிள்யூ.எம்.ஜே.கே. விஜேகோன் – 3 வது கொமாண்டோ படையணி
• சிறந்த சூட்டு வீரர் - சேவை படையணி பிரிவு : மேஜர் டபிள்யூ.ஏ.டி.எஸ். அபேநந்த - 2வது பொறியியல் சேவைகள் படையணி
• சிறந்த அதிகாரவாணையற்ற அதிகாரி : அதிகாரவாணையற்ற அதிகாரி II டி.பீ.நாகொடவிதான டிபீ - 14 வது (தொ) கெமுனு ஹேவா படையணி
• சிறந்த சூட்டு வீராங்கனை - பெண்கள் பிரிவு : மேஜர் ஆர்.எம்.ஏ.கே. ரத்நாயக்க – 7 வது இலங்கை இராணுவ மகளிர் படையணி