21st December 2025
மேஜர் ஜெனரல் பீ.எஸ். சுபத் சஞ்சீவ ஆர்எஸ்பீ என்பீஎஸ் பீஎஸ்சி அவர்கள் இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் 16வது படைத்தளபதியாக 2025 டிசம்பர் 18 அன்று இலங்கை இராணுவ மருத்துவப் படையணி தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.
வருகையின் போது அவருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை மற்றும் அணிவகுப்பு மரியாதை என்பன அவருக்கு வழங்கப்பட்டன.
அனைத்து நிலையினருக்கும் உரையாற்றிய அவர், படையணியின் இலக்குகளை அடைவதில் கூட்டு அர்ப்பணிப்பு மற்றும் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
அனைத்துப் நிலையினரின் பங்கேற்புடன் தேநீர் விருந்துபசாரத்துடன் அந் நாளின் நிகழ்வுகள் நிறைவடைந்தது.