21st December 2025
இராணுவத் தளபதி இலங்கை இராணுவ கல்வியற்கல்லூரியில் மதிப்புமிக்க சுவரை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 டிசம்பர் 20 அன்று வைபவ ரீதியாக திறந்து வைத்தார்.
"மதிப்புமிக்க சுவரில்", முன்னாள் இராணுவத் தளபதிகள், ஜெனரல் எஸ்.எச்.எஸ். கோட்டேகொட (ஓய்வு) டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பிஎஸ்வீ யுஎஸ்பீ என்டிசி முதல் தற்போதைய இராணுவத் தளபதி வரை, அவர்களின் அதிகாரப்பூர்வ உருவப்படங்கள் மற்றும் இலங்கை இராணுவ கல்வியற்கல்லூரி பயிலிளவல் அதிகாரிகளாக அவர்கள் பயிற்சி ஆண்டுகளில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்களுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த படங்கள் கல்வியற்கல்லூரி பயிலிளவல் அதிகாரிகளாக தங்கள் இராணுவ வாழ்க்கையைத் தொடங்கி பின்னர் இராணுவத் தளபதியாக மதிப்புமிக்க நியமனம் வரை உயர்ந்த அதிகாரிகளின் தொழில்முறை பயணத்தை பிரதிபலிக்கின்றன.
இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.