18th December 2025
படையணிகளுக்கிடையிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி 2025 டிசம்பர் 10 முதல் 12 வரை பனாகொட இராணுவ உடற்கல்வி பாடசாலை உள்ளக மைதானத்தில் நடைப்பெற்றது. இப்போட்டி 2025 டிசம்பர் 12, அன்று வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இந்த நிகழ்வில் மத்திய வழங்கல் கட்டளை தளபதியும் இராணுவ கராத்தே குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் ஆர்டி சாலி என்டிசீ அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.
சாம்பியன்ஷிப் முடிவுகள் பின்வருமாறு:
•சிறந்த ஆண் தடகள வீரர் - இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் சிப்பாய் - கேஜேவீ தெவ்மித்
•சிறந்த பெண் தடகள வீராங்கனை - இலங்கை இராணுவ பொது சேவைப் படையணியின் பெண் சிப்பாய் டபிள்யூ.எம்.எஸ்.எம். விஜேசுந்தர
கனிஷ்ட சாம்பியன்ஷிப் (ஆண்)
•சாம்பியன்கள் – கெமுனு ஹேவா படையணி
•இரண்டாம் இடம் - இலங்கை இராணுவ சேவைப் படையணி
கனிஷ்ட சாம்பியன்ஷிப் (பெண்)
•சாம்பியன்கள் - இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி
•இரண்டாம் இடம் - இலங்கை இராணுவ பொலிஸ் படையணி
சிரேஷ்ட சாம்பியன்ஷிப் (ஆண்)
•சாம்பியன்கள் - இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி
•இரண்டாம் இடம் - இலங்கை இலேசாயுத காலாட் படையணி
சிரேஷ்ட சாம்பியன்ஷிப் (பெண்)
•சாம்பியன்கள் - இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி
•இரண்டாம் இடம் - இலங்கை இராணுவ மகளிர் படையணி
ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் (ஆண்)
•சாம்பியன்கள் - இலங்கை இலேசாயுத காலாட் படையணி, இலங்கை சிங்க படையணி மற்றும் இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி (கூட்டு சாம்பியன்கள்)
•இரண்டாம் இடம் - கெமுனு ஹேவா படையணி
ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்(பெண்)
•சாம்பியன்கள் - இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி
•இரண்டாம் இடம் - இலங்கை இராணுவ மகளிர் படையணி