18th December 2025
தித்வா சூறாவளியைத் தொடர்ந்து அனர்த்த நிவாரண பணிகளை மேற்கொள்ள உடனடியாக ஒன்றிணைக்கப்பட்ட மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள பிரிவுகள், பிரிகேட்கள் மற்றும் பிரிவுகளின் படையினர் ஆற்றிய முன்மாதிரியான சேவையைப் மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் கேஏடபிள்யூஎன்எச் பண்டாரநாயக்க யூஎஸ்பீ அவர்கள் பாராட்டினார். 2025 டிசம்பர் 17 அன்று பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது இந்தப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இதன் போது உரையாற்றிய தளபதி அவர்கள், அனர்த்ததின் போது மீட்பு மற்றும் மனிதாபிமான உதவி நடவடிக்கைகளில் இலங்கை இராணுவத்தின் சுறுசுறுப்பான மற்றும் அர்ப்பணிப்புள்ள பங்கிற்காக பொதுமக்கள் மற்றும் அரசாங்கம் இருபாலரும் வைத்துள்ள உயர்ந்த அளவிலான நம்பிக்கையையும் விசுவாசத்தையும் எடுத்துரைத்தார்.
உரையைத் தொடர்ந்து, அவர் அனைத்து நிலையினருடன் தேநீர் விருந்தில் கலந்து கொண்டு அவர் படையினருடன் அன்பாக உரையாடினார். சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.