16th December 2025
ஏயர் டிராவல் சர்வீசஸ் (தனியார்) நிறுவன பணிப்பாளர்களின் குழு கூட்டம் 2025 டிசம்பர் 15 அன்று போக்குவரத்து பணிப்பக மாநாட்டு மண்டபத்தில் நடாத்தப்பட்டது. பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் பணிப்பாளர் குழுவின் தலைவராக கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார்.
இந்தக் கூட்டத்தின் போது, நிறுவனத்தின் செயல்பாட்டு செயல்திறன், நிதி விடயங்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்களை குழு மதிப்பாய்வு செய்தது. நிர்வாக, பொறுப்புக்கூறல் மற்றும் சேவை தரநிலைகள் குறித்து பதவி நிலை பிரதானி வழிகாட்டுதலை வழங்கினார். நிறுவனத்தின் செயல்திறனை அதன் கட்டளைக்கு ஏற்ப மேலும் வலுப்படுத்த பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.