15th December 2025
அண்மையில் மேஜர் ஜெனரல் நிலைக்கு நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஜீடிஜேசீ பிரேமதிலக்க யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ, மேஜர் ஜெனரல் கேஜீஎம்என் செனவிரத்ன யூஎஸ்பீ, மேஜர் ஜெனரல் கேஎம்ஜீ பண்டாரநாயக்க யூஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ மற்றும் மேஜர் ஜெனரல் கேஜீயூடி ஜயசிங்க ஆகியோர், 2025 டிசம்பர் 15 அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற முறையான மரியாதை நிமித்தமான சந்திப்பின் போது, இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களிடமிருந்து அதிகார சின்னங்களையும் வாழ்த்துக்களையும் பெற்றனர்.