10th December 2025
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா அவர்கள் எழுதிய "நாட்டிற்கு இராணுவத் தளபதியின் வாக்குறுதி - அடுத்த இராணுவத் தளபதிக்கு இந்தப் போரை நான் விட்டுச் செல்ல மாட்டேன்" ("The Army Commander’s Promise to the Nation - I Shall Not Leave This War Behind to the Next Army Commander") என்ற புத்தகம் வெளியீட்டு நிகழ்வு நேற்று (டிசம்பர் 09) கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) பிரதம அதிதியாக கலந்து கொண்டார், பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா (ஓய்வு) அவர்கள் கௌரவ அதிதியாக கலந்து கொண்டார்.
இலங்கையின் நவீன வரலாற்றில் ஒரு தீர்க்கமான காலகட்டத்தில் தனது அனுபவங்கள் மற்றும் தான் அனுபவித்த தலைமைத்துவ சவால்கள் தொடர்பில் பீல்ட் மார்ஷல் பொன்சேகா தனது உரையில் குறிப்பிட்டு உரையாற்றினார்.
இந்த நிகழ்வில் மகா சங்கத்தினர், திருமதி அனோமா பொன்சேகா மற்றும் குடும்ப உறுப்பினர்கள், முப்படைகளின் தளபதிகள், முன்னாள் இராணுவத் தளபதிகள், பீல்ட் மார்ஷலின் இராணுவ சகாக்கள், இராஜதந்திரிகள் முப்படைகளின் ஓய்வுபெற்ற சிரேஷ்ட அதிகாரிகள் உட்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
(தகவல்: defence.lk)