10th December 2025
இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 டிசம்பர் 10 ஆம் திகதி சிலாபத்தில் நடைபெற்று வரும் அனர்த்த நிவாரணப் பணிகளை ஆய்வு செய்வதற்காக கள விஜயம் மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது, குமாரகட்டுவ, அலிவிட்டியாவில் உள்ள 15 வது இலங்கை கள பீரங்கி படையணியின் பொம்பார்டியர் டபிள்யூ.ஏ. சோமசிறி மற்றும் பள்ளம, குமாரகட்டுவ, துக்கினியாகம 1 வது விஜயபாகு காலாட் படையணியின் கோப்ரல் பி.கே.கே. கருணாநாயக்க ஆகியோரின் வீடுகளை இராணுவத் தளபதி பார்வையிட்டார். உடனடி நிவாரணம் வழங்குவதற்காக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
ஸ்ரீ சுதர்சனராமய விகாரையில் இடம்பெயர்ந்த பல குடும்பங்களையும் இராணுவத் தளபதி பார்வையிட்டார். தனது பயணத்தை மேலும் விரிவுபடுத்தும் விதமாக, ஜப்பான் அனர்த்த நிவாரண (JDR) மருத்துவக் குழு உறுப்பினர்களையும், ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) பிரதிநிதிகளையும் சந்தித்து, இந்த இக்கட்டான காலகட்டத்தில் நாட்டிற்கு அவர்கள் அளித்த மதிப்புமிக்க பங்களிப்புகளை பாராட்டினார். மேலும் இலங்கைக்கு அவர்கள் அளித்த உடனடி உதவி மற்றும் தொடர்ச்சியான ஆதரவிற்கு அவர் நன்றி தெரிவித்தார்.
மேலும், சமீபத்திய பேரழிவால் இடிந்து விழுந்த சிலாபம்-தொடுவாவ வீதியில் உள்ள தொடுவாவ பாலத்தை இராணுவத் தளபதி பார்வையிட்டார். இந்திய இராணுவத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட இந்தப் பாலம், இலங்கை இராணுவத்தின் உதவியுடன் கொண்டு செல்லப்பட்டு, வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.
வெள்ளத்தால் சேதமடைந்த புஜ்ஜோமுவ புகையிரத நிலையத்திற்கு அருகிலுள்ள புஜ்ஜோமுவ பாலத்தையும் அவர் பார்வையிட்டதுடன், நடைபெற்று வரும் பழுதுபார்க்கும் பணிகளையும் கவனித்தார். இராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பு முயற்சியால் ஒரு தற்காலிக தனி வழி பாதை அமைக்கப்பட்டுள்ளது.