2025 ஆம் ஆண்டுக்கான இந்தியா-இலங்கை நட்புறவு கபடிப் போட்டி

இந்திய இராணுவ கபடி அணிக்கும் இலங்கை இராணுவ கபடி அணிக்கும் இடையிலான நட்புறவு கபடிப் போட்டி டிசம்பர் 2 மற்றும் 4 ஆம் திகதிகளில் பனாகொடை இராணுவ உள்ளக விளையாட்டு மைதானத்தில், இந்து-லங்கா இருதரப்பு விளையாட்டுப் பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக நடைபெற்றது.

டிசம்பர் 2 ஆம் திகதி நடைபெற்ற தொடக்கப் போட்டியில், இந்திய இராணுவ கபடி அணி 59 புள்ளிகளுடன் அபார வெற்றியைப் பெற்றதுடன் இலங்கை இராணுவ கபடி அணி 29 புள்ளிகளைப் பெற்றது. டிசம்பர் 4 ஆம் திகதி நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் வருகை தந்த அணிக்கு சாதகமாக முடிந்தது, அவர்கள் மீண்டும் 59 புள்ளிகளைப் பெற்றனர், அதே நேரத்தில் இலங்கை இராணுவ அணி 27 புள்ளிகளைப் பெற்றது.