9th December 2025
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 டிசம்பர் 09 ஆம் திகதி பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் பாடநெறி எண். 19 இன் மாணவ அதிகாரிகளுக்கு வழக்கமான உரையை நிகழ்த்தினார்.
வருகை தந்த இராணுவத் தளபதியை, பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் தளபதி மேஜர் ஜெனரல் எச்.எச்.கே.எஸ்.எஸ். ஹேவகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ ஆர்சீடிஎஸ்பீ பீஎஸ்சீ அவர்கள் மரியாதையுடன் வரவேற்றார். வரவேற்பை தெடர்ந்து பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரி கேட்போர் கூடத்தில் கூடியிருந்த பார்வையாளர்களுக்கு அன்றைய சிறப்பு பேச்சாளரை கல்லூரியின் தளபதி அறிமுகப்படுத்தினார். நட்பு நாடுகளைச் சேர்ந்த 26 அதிகாரிகள் உட்பட மொத்தம் 149 மாணவ அதிகாரிகள் இந்த அமர்வில் கலந்து கொண்டனர்.
"எதிர்கால செயற்பாட்டு சூழல்: இலங்கை இராணுவத்திற்கான மூலோபாய தொலைநோக்கு" என்ற தலைப்பில் தளபதியின் உரை, எதிர்கால செயற்பாட்டு சூழலின் வளர்ந்து வரும் தன்மை, மூலோபாய நிச்சயமற்ற தன்மைகளால் ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் இலங்கை இராணுவம் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் மூலோபாய சக்தியாக இருப்பதை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் ஆகியவற்றை ஆராய்ந்தது.
பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பதவிதாரிகள் கல்லூரியின் பாடநெறி எண் 19 இல் இலங்கை இராணுவத்திலிருந்து 74, கடற்படையிலிருந்து 25, விமானப்படையிலிருந்து 24 அதிகாரிகள் மற்றும் பங்களாதேஷ், சீனா, இந்தியா, இந்தோனேசியா, மாலத்தீவு, நேபாளம், ஓமன், பாகிஸ்தான், ருவாண்டா, சவுதி அரேபியா மற்றும் சாம்பியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த 26 பேர் உட்பட 149 மாணவ அதிகாரிகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் மதிப்புமிக்க 'பீஎஸ்சீ' தகுதிக்கான பயிற்சி பெற்று வருகின்றனர்.