7th December 2025
இலங்கை சமிக்ஞை படையணியின் 19 வது படைத்தளபதியாக பிரிகேடியர் கே.எம்.ஜி. பண்டாரநாயக்க யூஎஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்கள் 2025 டிசம்பர் 01, அன்று இலங்கை சமிக்ஞைப் படையணி தலைமையகத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.
அன்றைய நிகழ்வுகள் நிலைய தளபதி பிரிகேடியர் ஆர்.சீ விஜேகோன் யூஎஸ்பீ பீஎஸ்சீ அவர்களின் வரவேற்பு மற்றும் நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையுடன் ஆரம்பமாகியது.
பின்னர் இலங்கை சமிக்ஞை படையணி படைத்தளபதி பேர் வீரர்கள் நினைவு தூபியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதனை தொடர்ந்து படையணி தலைமையக அணிவகுப்பு மைதானத்தில் மரியாதை அணிவகுப்கு மரியாதை செலுத்தப்பட்டதுடன் அந் நாளை நினைவுகூரும் முகமாக அதிகாரிகளுடன் குழு படம் எடுத்துகொண்டார்.
தனது அலுவலகத்தின் முறையான கடமைகளை ஏற்றுக்கொண்ட அவர், மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் ஒரு அதிகாரப்பூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டார். கடமைகளை ஏற்றுக்கொண்ட பிறகு, படைத்தளபதி அபிவிருத்தி, புதுப்பித்தல் மற்றும் துடிப்பான புதிய தொடக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் ஒரு மரக்கன்றை நாட்டினார்.
பின்னர், அனைத்துப் நிலையினருடனான பாரம்பரிய தேநீர் விருந்துபசாரம் நடைப்பெற்றது. பின்னர், அனைத்துப் நிலையினருக்கு உரையாற்றிய அவர், இராணுவத் தளபதியின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப தனது தொலைநோக்குப் பார்வையை வலியுறுத்தியதுடன் இது இலங்கை இராணுவம் மற்றும் இலங்கை சமிக்ஞை படையணியின் தொடர்ச்சியான சிறப்பிற்கான களத்தை அமைத்தது.
பின்னர் இலங்கை சமிக்ஞை படையணி படைத்தளபதி மாநாட்டு மண்டபத்தில் கட்டளை அதிகாரிகள் மற்றும் பேரவை உறுப்பினர்கள் உட்பட அனைத்து அதிகாரிகைகும் உரையாற்றினார். அன்றைய நிகழ்வுகள் படையணி தலைமையக அதிகாரிகள் உணவகத்தில் அதிகாரிகளின் மதிய உணவோடு நிறைவடைந்தது.