12 வது காலாட் படைப்பிரிவின் புதிய தளபதி கடமை பொறுப்பேற்பு

விஷேட படையணியின் மேஜர் ஜெனரல் எம்.பீ.கே.எல். அமரசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ அவர்கள் 12 வது காலாட் படைப்பிரிவின் 21 வது தளபதியாக 2025 டிசம்பர் 04 ஆம் திகதி 12 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்வின் போது கடமை பொறுப்பேற்றார்.

வருகை தந்த தளபதிக்கு 18 வது கெமுனு ஹேவா படையணியின் படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், தளபதி குழுப்படம் எடுத்துக் கொண்டதுடன், ஒரு மரக்கன்றையும் நாட்டினார். அனைத்து நிலையினருக்குமான தேநீர் விருந்துபசாரத்தில் கலந்து கொண்டு படைப்பிரிவின் படையினருக்கு உரையாற்றினார்.

இந்த நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.