ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலின் சிரப்பான சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

இராணுவத் தலைமையக நலன்புரி பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஜி.சீ.வீ. பெர்னாண்டோ என்டிசீ அவர்கள் 34 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கையின் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 2025 டிசம்பர் 03 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம்:

மேஜர் ஜெனரல் ஜி.சீ.வீ. பெர்னாண்டோ என்டிசீ அவர்கள் 1991 ஆகஸ்ட் 26 அன்று இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையின் பாடநெறி இல 37 இல் பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். பாகிஸ்தான் இராணுவ கல்வியற் கல்லூரி மற்றும் இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி ஆகியவற்றில் அடிப்படை இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த அவர் 1993 டிசம்பர் 19 இரண்டாம் லெப்டினன் நிலையில் இலங்கை இராணுவ சமிக்ஞை படையணியில் நியமிக்கப்பட்டார். தனது இராணுவ பணிக்காலத்தில் அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்ட அவர், 2025 ஜூன் 13 ஆம் திகதி மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்டார். சிரேஷ்ட அதிகாரி 2025 டிசம்பர் 11 ஆம் திகதி தனது 55 வயதை அடைந்ததும் இலங்கை இராணுவ நிரந்தர படையிலிருந்து ஓய்வு பெறுவார். ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரி இராணுவத் தலைமையக நலன்புரி பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமாக பதவி வகிக்கின்றார்.

தனது புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கையில், இலங்கை சமிக்ஞைப் படையணியின் 5வது புலனாய்வு படையணியின் குழு தளபதி, இலங்கை சமிக்ஞைப் படையணியின் 5வது புலனாய்வு படையணியின் நிறைவேற்று அதிகாரி, அதிரடி படையின் பொது பணிநிலை அதிகாரி 3, 22 வது காலாட் படைப்பிரிவின் பொதுப் பணிநிலை அதிகாரி 3 (நடவடிக்கை), தலைமையகத்தில் பொதுப் பணிநிலை அதிகாரி 3 (நடவடிக்கை), எயர் மொபைல் பிரிகேட் தலைமையகத்தில் பொதுப் பணிநிலை அதிகாரி 3, (நடவடிக்கை), 4வது இலங்கை சமிக்ஞைப் படையணியின் நிறைவேற்று அதிகாரி, யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் சமிக்ஞை அதிகாரி, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர், இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி அதிகாரிகள் கற்றல் மையத்தில் பணி நிலை அதிகாரி 2, 4வது இலங்கை சமிக்ஞைப் படையணியின் தகவல் தொடர்புப் படையின் கட்டளை அதிகாரி, வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் சமிக்ஞை அதிகாரி, 10வது புலனாய்வு இலங்கை சமிக்ஞைப் படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி மற்றும் யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் சமிக்ஞைப் படையின் அதிகாரி கட்டளைத் உள்ளிட்ட பல முக்கிய பதவிகளை அவர் வகித்துள்ளார்.

குறிபார்த்து சுடல் மற்றும் ஸ்னைப்பர் பயிற்சி பாடசாலையின் தலைமை பயிற்றுவிப்பாளராகவும், ஹைட்டி ஐக்கிய நாட்டு அமைதி காக்கும் நிலைப்படுத்தல் இலங்கை இராணுவக் குழுவின் சமிக்ஞைப் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாகவும், 64 வது காலாட் படைப்பிரிவின் பொதுப் பணி நிலை அதிகாரி 1 (ஒருங்கிணைப்பு), வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பொதுப் பணிநிலை அதிகாரி 1 (ஒருங்கிணைப்பு), 9வதுஇலங்கை சமிக்ஞைப் பயைணியின் கட்டளை அதிகாரியாகவும், அதிகாரி தொழிலாண்மை மேம்பாட்டு மையத்தின் நிர்வாகப் பிரிவின் கட்டளை அதிகாரியாகவும், 53 காலாட் படைப்பிரிவின் பொதுப் பணிநிலை அதிகாரி 1 (ஒருங்கிணைப்பு), இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரி நிர்வாகப் பிரிவின் கட்டளை அதிகாரியாகவும், பாதுகாப்பு பதவி நிலை பிரதானி அலுவலகத்தின் கேணல் (வழங்கல்), இராணுவத் தலைமையகம் சமிக்ஞை அதிகாரி அலுவலகத்தில் - பிரிகேடியர் ஒருங்கிணைப்பு, நலன்புரி பணிப்பகத்தின் பணிப்பாளர் ஆகிய பதவிகளை வகித்துள்ளதுடன் இராணுவத் தலைமையகத்தில் நலன்புரி பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமாக தற்போது கடமையாற்றுகின்றார்.

சமிக்ஞை இளம் அதிகாரிகள் பாடநெறி, அடிப்படை பராசூட் பயிற்சி பாடநெறி, அடிப்படை குறிபார்த்து சுடல் பயிற்றுவிப்பாளர் பாடநெறி, படையலகு பயிற்சியாளர்கள் பாடநெறி, நடைமுறை பிஸ்டல் பாடநெறி மற்றும் தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் பாடநெறி உள்ளிட்ட பல உள்நாட்டு படிப்புகளை அவர் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.

வெளிநாட்டில், பாகிஸ்தான் பயிலிளவல் அதிகாரி பயிற்சி பாடநெறி, இந்தியாவில் சமிக்ஞை இளம் அதிகாரிகள் பாடநெறி, பாகிஸ்தானில் சிரேஷ்ட பணிநிலை பாடநெறி (சமிக்ஞை), இந்தியாவில் சமிக்ஞை நிறுவன தளபதிகள் பாடநெறி மற்றும் சீனாவில் ரேடார் பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பொறியியல் (டிப்ளோமா) பாடநெறி ஆகியவற்றினை பயின்றுள்ளார்.

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் வழங்கல் முகாமைத்துவ வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டத்தையும், ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகளில் முதுகலைப் பட்டத்தையும், இலங்கையில் தேசிய ரேஞ்ச் அதிகாரிகள் நிறுவனத்தால் தேசிய நிலை 1 ரேஞ்ச் அதிகாரியாக தகுதி பெற்றுள்ளார்.