இலங்கை இராணுவ படையணிகளுக்கிடையிலான வுஷு போட்டி பனாகொடையில் நிறைவு

பனாகொடை இராணுவ உள்ளக விளையாட்டு அரங்கில் நவம்பர் 25 முதல் 27 வரை இலங்கை இராணுவ படையணிகளுக்கிடையிலான வுஷு போட்டி வெற்றிகரமாக நடைபெற்றது. இராணுவத்தின் பல்வேறு படையணிகளைச் சேர்ந்த மொத்தம் 127 விளையாட்டு வீர மற்றும் வீராங்கனைகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையின் பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்) மற்றும் இலங்கை இராணுவ வுஷு குழுவின் தலைவர் மேஜர் ஜெனரல் சீஎஸ். திப்பொட்டுகே இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.

ஆண்கள் சாம்பியன்ஷிப்பில் இலங்கை சிங்க படையணி தொடர்ந்து ஆறாவது முறையாக வெற்றி பெற்றதுடன் இலங்கை சமிக்ஞை படையணி இரண்டாம் இடத்தைப் பெற்றது. பெண்கள் பிரிவில், இலங்கை இராணுவ பொது சேவை படையணி சாம்பியன்ஷிப்பை வென்றதுடன், அதே நேரத்தில் இலங்கை இராணுவ மகளிர் படையணி இரண்டாம் இடத்தைப் பெற்றுகொண்டமை என்பது குறிப்பிடதக்கதாகும்.