ஓய்வுபெறும் மேஜர் ஜெனரலின் சிறப்பான சேவைக்கு இராணுவத் தளபதி பாராட்டு

கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் வழங்கல் தளபதியும், இராணுவ புலனாய்வுப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் டி.என். மஜீத் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ ஐஎஸ்சீ அவர்கள் 34 ஆண்டுகளுக்கும் மேலான புகழ்பெற்ற இராணுவ வாழ்க்கையின் பின்னர் இலங்கை இராணுவத்திலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு 2025 டிசம்பர் 02 ஆம் திகதி இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டார்.

ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் சுருக்கமான விவரம்:

மேஜர் ஜெனரல் டி.என். மஜீத் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ ஐஎஸ்சீ அவர்கள் கொத்தலாவ பாதுகாப்பு கல்வியற் கல்லூரி பாடநெறி 9 இல் 1991 நவம்பர் 17 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் நிரந்தர படையணியில் பயிலிளவல் அதிகாரியாக இணைந்தார். ரத்மலானை ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவ பாதுகாப்பு கல்வியற் கல்லூரி மற்றும் தியத்தலாவை இராணுவ கல்வியற் கல்லூரி ஆகியவற்றில் அடிப்படை இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த அவர், 1993 நவம்பர் 22 ஆம் திகதி இரண்டாம் லெப்டினன் நிலையில் கொமாண்டோ படையணியில் நியமிக்கப்பட்டார். பின்னர், சிரேஷ்ட அதிகாரி இராணுவ புலனாய்வுப் படையணிக்கு மாற்றப்பட்டார். தனது இராணுவ பணிக்காலத்தில் அடுத்தடுத்த நிலைக்கு உயர்த்தப்பட்ட அவர், 2025 ஜனவரி 18 ஆம் திகதி மேஜர் ஜெனரல் நிலைக்கு உயர்த்தப்பட்டார். சிரேஷ்ட அதிகாரி 2025 டிசம்பர் 05 ஆம் திகதி தனது 55 வயதை அடைந்ததும் இலங்கை இராணுவ நிரந்தர படையிலிருந்து ஓய்வு பெறுவார். ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரி கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் வழங்கல் தளபதி மற்றும் இராணுவ புலனாய்வுப் படையணியின் படைத் தளபதி மற்றும் இலங்கை இராணுவ முஸ்லிம் சங்கத்தின் தலைவர் ஆகிய பதவிகளை வகிக்கின்றார்.

மேஜர் ஜெனரல் டி.என். மஜீத் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ என்டிசீ ஐஎஸ்சீ அவர்கள் தனது பணிக்காலத்தில், கூட்டு நடவடிக்கை தலைமையகத்தில் புலனாய்வு அதிகாரி, 17 வது காலாட் பிரிகேட் தலைமையகத்தின் புலனாய்வு அதிகாரி, சுதந்திர புலனாய்வுப் பிரிவின் புலனாய்வு அதிகாரி, 22 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தின் புலனாய்வுப் பிரிவின் குழு தளபதி,112 வது காலாட் பிரிகேடின் புலனாய்வு அதிகாரி, கொழும்பு செயற்பாட்டு கட்டளையின் சிரேஷ்ட புலனாய்வு அதிகாரி, இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியின் அதிகாரி கட்டளை (நிர்வாகம்), இராணுவ புலனாய்வு பயிற்சி பாடசாலையின் தலைமை பயிற்றுவிப்பாளர், 2 வது இராணுவ புலனாய்வுப் படையணியின் இரண்டாம் கட்டளை அதிகாரி, 1 வது இராணுவ புலனாய்வுப் படையணியின் பதில் கட்டளை அதிகாரி, ஹைட்டி ஐ.நா அமைதி காக்கும் படை குழுவின் இலங்கை படையலகின் புலனாய்வு அதிகாரி மற்றும் 1 வது இராணுவ புலனாய்வுப் படையணியின் கட்டளை அதிகாரி உள்ளிட்ட பதவிகளை வகித்துள்ளார்.

மேலும் அவர், பாதுகாப்பு அமைச்சின் தேசிய புலனாய்வு அலுவலக தலைமையத்தின் வெளிநாட்டு புலனாய்வு ஒருங்கிணைப்பாளர், பிரான்சில் உள்ள இலங்கை தூதரகத்தின் முதல் செயலாளர் (பாதுகாப்பு), இராணுவ புலனாய்வு பணிப்பகத்தின் பொதுப் பணிநிலை அதிகாரி 1 (பாதுகாப்பு), இராணுவ புலனாய்வு பயிற்சி பாடசாலையின் பதில் தளபதி, இராணுவ புலனாய்வு பணிப்பகத்தின் பதில் கேணல் (புலனாய்வு), 23 வது காலாட் படைப்பிரிவின் (பொதுப் பணிநிலை), இராணுவ புலனாய்வுப் படையணியின் நிலைய தளபதி, உளவியல் செயற்பாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளர், ஆராய்ச்சி மற்றும் கோட்பாடு பணிப்பகத்தின் பயிற்சி கருத்து மற்றும் கண்காணிப்பு பிரிவின் பிரிகேடியர் (கருத்து மற்றும் கண்காணிப்பு), ஆராய்ச்சி மற்றும் கோட்பாடு பணிப்பகத்தின் பணிப்பாளர் ஆகிய பதவிகளை வகித்துள்ளதுடன் கிழக்கு பாதுகாப்புப் படை தலைமையகத்தின் வழங்கல் தளபதி மற்றும் இராணுவ புலனாய்வுப் படையணியின் படைத் தளபதி பதவிகளை வகிக்கின்றார்.

இலங்கை இராணுவத்திற்கு அவர் செய்த அர்ப்பணிப்பு மற்றும் முன்மாதிரியான சேவையைப் பாராட்டி, அவருக்கு ரண சூர பதக்கம் மற்றும் உத்தம சேவா பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

இந்த சிரேஷ்ட அதிகாரி தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் பாடநெறியை வெற்றிகரமாக முடித்துள்ளார். பங்களாதேஷில் அடிப்படை புலனாய்வு பாடநெறி, இந்தியாவில் இந்தியாவில் உயர் புலனாய்வு பணிநிலை அதிகாரிகள் பாடநெறி, ஹைட்டியில் ஐக்கிய நாடுகள் இராணுவ ஊக்குவிப்பு பயிற்சி பாடநெறி, ஐக்கிய இராச்சியத்தில் ஐக்கிய இராச்சிய பயிற்சிப் பாடநெறி, பாகிஸ்தானில் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுமக்கள் பாதுகாப்பு பாடநெறி, அவுஸ்ரேலியாவில் வன்முறை தீவிரவாத எதிர்ப்பு பயிற்சியாளர் பாடநெறி, இந்தியாவில் "பயங்கரவாத எதிர்ப்பு, சைபர் பாதுகாப்பு மற்றும் நாடுகடந்த குற்றங்களை எதிர்த்தல்" பாடநெறி, இந்தியாவில் பாதுகாப்பு முகாமைத்துவ பாடநெறி மற்றும் நெதர்லாந்தில் எராஸ்மஸ் பல்கலைக்கழகத்தால் நடாத்தப்படும் சர்வதேச பாதுகாப்பு முகாமைத்துவ பாடநெறி (நிகழ்நிலை கடன் அல்லாத பாடநெறி) உள்ளிட்ட பல வெளிநாட்டுப் பாடநெறிகளையும் அவர் பயின்றுள்ளார்.

அவர் லண்டன் மெட்ரோபொலிட்டன் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம், சேர் ஜோன் கொத்தலாவ பாதுகாப்பு கல்வியற் கல்லூரியில் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவத்தில் முதுகலை டிப்ளோமா, இந்தியாவின் சென்னையிலுள்ள இந்திய முகாமை மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் மனிதவள முகாமை மற்றும் பணியாளர் துறையில் முதுகலை டிப்ளோமா, சேர் ஜோன் கொத்தலாவ பாதுகாப்பு கல்வியற் கல்லூரியில் கலை இளங்கலை (பாதுகாப்பு ஆய்வுகள்), இலங்கையின் திறன் மேம்பாட்டு நிதி லிமிடெட்டில் வணிக ஆங்கிலத்தில் சான்றிதழ் படிப்பு, இலங்கை பணியாளர் முகாமைத்துவ நிறுவனத்தில் (IPM) மனிதவள முகாமையில் சான்றிதழ் பாடநெறியையும் முடித்துள்ளார்.