2nd December 2025
தித்வா சூறாவளிக்குப் பின்னர் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறனை வலுப்படுத்தும் வகையில், சுமார் ரூ. 500,000.00 பெறமதியான பாதுகாப்பு ஜாக்கெட்டுகள் 2025 நவம்பர் 30 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டன.
வெள்ள மீட்பு முயற்சிகள், நிலச்சரிவு மீட்பு பணிகள் மற்றும் சூறாவளியின் தாக்கத்தால் எழும் ஏனைய மனிதாபிமான பணிகளில் ஈடுபடும் படையினரின் பாதுகாப்பை மேம்படுத்தும் என இந்த பங்களிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. அதிக ஆபத்துள்ள சூழ்நிலைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கிடைக்கும் பாதுகாப்பு உபகரணங்களை மேம்படுத்துவதன் மூலம், நன்கொடை மிகவும் திறமையான மற்றும் பாதுகாப்பான உயிர்காக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும். டொயோட்டா லங்கா பிஎல்சி இனால் செயற்படுத்தப்பட்ட இந்த முயற்சி, தேசிய அனர்த்த முகாமைத்துவ மற்றும் நிவாரண முயற்சிகளுக்கான அமைப்பின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.
இலங்கை இராணுவத்தின் சார்பாக பிரதி இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் வை.ஏ.பி.எம் யஹாம்பத் ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் நன்கொடையை பெற்றுக்கொண்டார்.