1st December 2025
இராணுவத் தலைமையகத்தில் இன்று காலை, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடீஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்களின் தலைமையில் ஒரு சந்திப்பு இடம்பெற்றது. இதில் இராணுவம், பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிலவும் சீரற்ற வானிலையை மதிப்பிடுவது மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடாத்தப்பட்டு வரும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்துதல் மற்றும் ஒருங்கிணைப்பது குறித்து இந்த சந்திப்பு கவனம் செலுத்தியது.