29th November 2025
வெள்ளம்பிட்டிய ராஜசிங்க கல்லூரியில் நிறுவப்பட்ட அவசர பாதுகாப்பு நிலையத்திற்கு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் 2025 நவம்பர் 29 ஆம் திகதி விஜயம் செய்து, பாதிக்கப்பட்டவர்களின் நிலைமைகளை பார்வையிட்டதுடன், அப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அனர்த்த நிவாரண பணிகளை மதிப்பாய்வு செய்தார்.
இந்த விஜயத்தின் போது, இராணுவத் தளபதி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்த குடும்பங்களை தொடர்பு கொண்டு, அவர்களின் உடனடித் தேவைகள், சுகாதாரக் பிரச்சினைகள் மற்றும் அனைத்து நலன் குறித்து விசாரித்தார்.