21 வது காலாட் படைப்பிரிவினால் இரத்த தான முகாம் ஏற்பாடு

சிறுநீரகம், புற்றுநோய் மற்றும் தலசீமியா நோயாளிகளுக்கு இரத்தப் பற்றாக்குறை நிலவுவது குறித்து அனுராதபுரம் இரத்த வங்கியின் அவசர கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, 21 வது காலாட் படைப்பிரிவு உடனடியாக நடமாடும் இரத்த தான திட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிகழ்ச்சித்திட்டம், 2025 நவம்பர் 25 ஆம் திகதி 21 வது காலாட் படைப்பிரிவில், அனுராதபுரம் இரத்த வங்கி மருத்துவக் குழுவின் ஆதரவுடன், 21 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் 212 வது காலாட் பிரிகேட் தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் நடாத்தப்பட்டது.

இத்திட்டத்தில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் பொதுமக்கள் இரத்த தானம் செய்தனர்.