27th November 2025
2025 நவம்பர் 27 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, அரசாங்க அதிகாரிகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பைப் பேணவும், தொடர்ந்து நடைபெறும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளும் இருப்பதை உறுதி செய்யவும், இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் அனைத்து மட்டங்களிலும் உள்ள தளபதிகளுக்கு அறிவுறுத்தினார்.
இராணுவத் தலைமையகத்தின் முதன்மை பதவிநிலை அதிகாரிகள் மற்றும் பணிப்பாளர்கள், பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதிகள் மற்றும் காலாட் படைப்பிரிவின் தளபதிகள் மெய்நிகர் தளம் மூலம் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர்.