மியன்மார் மனிதாபிமான பணிக்காக இலங்கை இராணுவக் குழுவிற்கு இராணுவத் தளபதி பாராட்டு

2025 நவம்பர் 26 அன்று இராணுவத் தலைமையகத்தில் நடைப்பெற்ற நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ ஆர்எஸ்பீ சீடிஎப்-என்டியூ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் சமீபத்திய ஏற்பட்ட பேரழிவு நிலநடுக்கத்தின் பின்னர் மியன்மாரில் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட இராணுவக் குழுவினருக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட பிராந்தியத்தில் அவசர நிவாரண நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க, நைபிடாவ் மாகாணம் முழுவதும் 2025 ஏப்ரல் 05 முதல் ஏப்ரல் 26, வரை முப்படைகளைச் சேர்ந்த பணியாளர்களைக் கொண்ட இந்தக் குழு அனுப்பப்பட்டது. தரை நிலைமைகளை மதிப்பிடுதல், சேதமடைந்த சுகாதார உட்கட்டமைப்பை வலுப்படுத்துதல், நடமாடும் மருத்துவ பரிசோதனை, அவசர மருத்துவ சேவையை, விரிவான சுகாதார கண்காணிப்பு மதிப்பீடுகளை மேற்கொள்வதில் அவர்களின் பணி கவனம் செலுத்தப்பட்டது. அவர்கள் உதவிகளை திறம்பட விநியோகிக்க உதவியதுடன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான ஒழுங்கமைக்கப்பட்ட நன்கொடைத் திட்டம் உட்பட, அதிக தேவை உள்ள பகுதிகளில் ஆதரவு திட்டங்களை செயல்படுத்தினர்.

இந்த நிகழ்வின் போது, 16 இராணுவத்தினரும் 03 கடற்படை வீரர்களும் மியன்மார் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பாராட்டுச் சின்னங்களைப் (பதக்கங்கள்) பெற்றனர், இது வெளிநாட்டுப் பணிகளின் போது அவர்களின் சிறந்த சேவையைக் குறிப்பதாகும்.