படைவீரர்களுக்குச் சொந்தமான உபகரண ஆய்வு

16 வது இலங்கைப் பாதுகாப்பு படைக் குழு 2025 ஆம் ஆண்டிற்கான இரண்டாவது மற்றும் இறுதி காலாண்டு படைவீரர்களுக்குச் சொந்தமான உபகரண ஆய்வை வெற்றிகரமாக முடித்தது. லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் 15 அதிகாரிகள் கொண்ட குழுவால், நகௌராவில் உள்ள ஸ்ரீ முகாமில் 2025 நவம்பர் 19 ஆம் திகதி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் உபகரண ஆய்வுக்குழு, இந்த ஆய்வை எந்த அவதானிப்புகள் அல்லது குறைபாடுகளையும் தெரிவிக்காமல் மிகவும் பாராட்டத்தக்க முடிவுகளுடன் நிறைவு செய்தது. இந்த சாதனை, செயற்பாட்டுத் தயார்நிலை மற்றும் நுணுக்கமான உபகரண பராமரிப்புக்கான பிரிவின் விதிவிலக்கான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது, இது லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் கீழ் 16 வது இலங்கை பாதுகாப்பு படைக் குழுவின் கடமைகளை ஏற்றுக்கொண்டதிலிருந்து தொடர்ச்சியான இரண்டாவது வெற்றிகரமான ஆய்வகும்.